Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏலியனுடன் லாலி பாப் சாப்பிடும் சிவகார்த்திகேயன் - அயலான் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் ...!

Advertiesment
ஏலியனுடன் லாலி பாப் சாப்பிடும் சிவகார்த்திகேயன் - அயலான் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் ...!
, திங்கள், 17 பிப்ரவரி 2020 (19:12 IST)
சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 
 
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு மத்தியில் பெரிதாக பேசப்படும் நடிகர் சிவகார்திகேயன் இன்று தனது 35வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். எஸ்கே பிறந்தநாள் ஸ்பெஷலாக நெல்சன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியது.
 
அதையடுத்து மீண்டும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது என கூறி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில், சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை 7 மணிக்கு அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவித்திருந்தனர். 
 
அந்தவகையில் சற்றுமுன் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது  வேற்றுகிரக மனிதர்களை கொண்ட வித்யாசமான கதையம்சத்தில் உருவாகிவரும் இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார். 24AM Studios நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த போஸ்டரில் சிவகார்த்திகேயன் ஏலியனுடன் லாலி பாப் வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார். "எனது புதிய நண்பரை வேறொரு உலகத்திலிருந்து அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி" என குறிப்பிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.  
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளமையின் காட்டில்.....மீண்டும் ஒரு மரியாதை படத்தின் வீடியோ பாடல் இதோ!