டாக்டர் மற்றும் நைவ்ஸ் அவுட் படத்தின் போஸ்டர்கள்
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் டாக்டர் படத்தின் போஸ்டர் நைவ்ஸ் அவுட் என்ற் ஹாலிவுட் படத்தின் போஸ்டரைக் காப்பிஅடித்து உருவாக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
சிவகார்த்திகேயன் நடிப்பில் ’கோலமாவு கோகிலா’ நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’டாக்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 11.03 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதன்படி இன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
வெளியாகி ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்த போஸ்டர் எந்த படத்தின் காப்பி என்பதை ரசிகர்கள் அதற்குள் கண்டுபிடித்துவிட்டனர். இந்த வருடம் ஆஸ்கர் பட்டியலில் திரைக்கதை பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டு இருந்த நைவ்ஸ் அவுட் என்ற படத்தின் போஸ்டரைதான் லேசாக மாற்றி இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.