தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர் அட்லீ. இவர், ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இவர் இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஜவான். இப்படம், பாலிவுட் சினிமாவில் வசூல் சாதனை படைத்தது. அவர் இயக்கிய முதல் இந்திப் படமே கல்லா கட்டியதால், அவர் மீது இந்தி ஹீரோக்கள் பார்வை திரும்பியுள்ளது.
அட்லீ அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார்.
ஆனால் இப்படத்திற்கு உஷாராக அவர் இப்படம் ரூ. 500 கோடி வசூலீட்டினால் தனக்கு இப்படத்தின் வருமானத்தில் இருந்து சம்பளத்துடன் பிராஃபிட் ஷேர் வேண்டும் என்று சன்பிக்சர்ஸ் நிர்வாகத்தில் பேசியுள்ளாராம்.
சன்பிக்சர்ஸ் நிறுவனம் கரக்டான சம்பளம் கொடுத்து வரும் நிறுவனம் என்ற பெயர் எடுத்துள்ளதால், இதற்கு அவர்கள் ஒப்புக் கொண்டார்களா? எனக் கேள்வி எழும். இதற்கான பதில் ஆம் என்பதே ஆகும்.
ஏற்கனவே ஜவான் படத்தின் சூப்பர் வெற்றி உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்ததால், இப்படமும் அதிக வசூல் குவிக்க வாய்ப்புள்ளதாக கருதி சன்பிக்சர்ஸ் இதற்கு ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
எனவே இப்படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. அநேகமாக அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிக்கலாம் என கூறப்படுகிறது.