Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் 69 படத்தின் இயக்குநர் வினோத்தா? அட்லீயா?

Advertiesment
vijayy

Sinoj

, செவ்வாய், 12 மார்ச் 2024 (22:15 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது,  தி கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ்  நிறுவனம் தயாரிக்கிறது.
 
சமீபத்தில், நடிகர் விஜய்,தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்து, மக்களவை தேர்தல் அல்ல, வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபைத்தேர்தல் தான் தனது இலக்கு என்று அறிக்கைவெளியிட்டிருந்தார்.
 
இந்த நிலையில், இவரது கடைசி படமான விஜய்69 படத்தை யார் இயக்குவார் ? என்ற கேள்வி எழுந்தது.
 
இந்த  நிலையில், சதுரங்கவேட்டை, தீரம் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கி ஹெச்.வினோத் விஜய்யின் 69வது மற்றும் கடைசி படத்தை இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியானது.
 
அதேசமயம்  விஜய்யின் 69வது மற்றும் கடைசி படத்தை அட்லீ இயக்கவிருப்பதாகவு தகவல் வெளியாகிறது.
 
ஆனால் இருவரில் யார் இயக்குவது என்பதை முடிவெடிக்க இன்னும் 10 நாட்கள் ஆகும் என விஜய் தரப்பில் கூறியதாகவும் தகவல் வெளியாகிறது.
 
10 நாட்களுக்கு முன்பு அட்லீ மற்றும் பிரபல நிறுவனத்தின் நிர்வாகியும் என்பவரும் பேசியதாகவும், இதில் விஜய் ஹீரோவாகவும், சமந்தா ஹீரோயினாகவும், கேமிரோ ரோலில் ஷாருக்கான் நடிக்கவிருப்பதாகவும் இதுபற்றி ஷாருக்கிடம் அட்லீ பேசியதாகவும்  கூறப்படுகிறது.
 
விஜய்யின் ஆஸ்தான இயக்குனர் அட்லீ என்பதால், அவரே தன் கடைசிப் படத்தை இயக்க வேண்டும் என்று தீர்மானித்துவிட்டால் அட்லீ இயக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
 
அதே சமயம் விஜய் வேறு இயக்குனரை தேர்வு செய்தால் அட்லீ, அல்லு அர்ஜூன் படத்தை இயக்குவார் என தகவல் வெளியாகிறது.
 
விஜய் தரப்பு இன்னும் சில நாட்களில் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம் என தெரிகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிஏஏ விவகாரத்தில் நடிகர் விஜய் அடிப்படை அறிவு இல்லாமல் பேசுகிறார்-அர்ஜூன் சம்பத்