Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலீஸுக்கு முன்பே பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் அதர்வாவின் ‘DNA’!

vinoth
வியாழன், 19 ஜூன் 2025 (12:02 IST)
ஒருநாள் கூத்து திரைப்படம் மூலமாக கவனம் ஈர்த்தவர் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த படம் வெற்றியைப் பெற்றது.

அதையடுத்து அவர் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ஃபர்ஹானா திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்தது. ஆனால் வசூல் ரீதியாக ஜொலிக்கவில்லை. இதையடுத்து அவர் தற்போது அதர்வா மற்றும் நிமிஷாவை வைத்து DNA என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். அந்த படம் பல தாமதங்களுக்குப் பிறகு தற்போது ஜூன் 20 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. படத்தை ஒலிம்பியா பிக்சர்ஸ் அம்பேத் தயாரிக்க, ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்த படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் ரிலீஸுக்கு முன்பே நல்ல விமர்சனங்களைப் பெறத் தொடங்கியுள்ளது. நேற்று இந்த முன்னோட்டக் காட்சி திரையிடப்பட்ட படம் பார்த்த திரை பிரபலங்கள் படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளனர். அதே போல படத்தின் டிரைலரும் சமீபத்தில் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் பரதேசி படத்துக்குப் பிறகு அதர்வாவுக்கு ஒரு திருப்புமுனைப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தில் மோகன் பாபு… கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

ஒருவழியாக ஓடிடியில் ரிலீஸாகும் ‘லோகா’… தேதி இதுதான்!

எது நடந்ததோ அது….. நன்றாகவேவா? நடந்தது.. கரூர் சம்பவம் குறித்து இயக்குனர் பார்த்திபன்..

நீங்க அரசியலுக்கு செட்டாக மாட்டீங்கன்னு விஜய்கிட்ட சொன்னேன்! - சர்கார் பட நடிகர் பதிவு!

கேஷ்வல் உடையில் ஹாட் போஸில் அசத்தும் பூனம் பாஜ்வா!

அடுத்த கட்டுரையில்
Show comments