Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர்யா, பா.ரஞ்சித் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஆர்யா, பா.ரஞ்சித் பட  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
, திங்கள், 30 நவம்பர் 2020 (20:53 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான காலா திரைப்படத்துக்கு பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின் ’’சார்பேட்டா பரம்பரை’’ என்ற திரைப்படம் உருவாக உள்ளது.  இதில் ஆர்யா பாக்ஸராக நடிக்க உள்ளார். இப்படத்திற்காக அவர் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

கொரொனா கால ஊரடங்கு சில தளர்களுடன் அமலில் உள்ள நிலையில். திரைப்படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்து.

இப்படத்தின் சென்னையை அடுத்த ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வரும் நிலையில், இன்று பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், ஆர்யாவின் 30 வது படமான ’’சார்பேட்டா பரம்பரை என்ற படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆர்யா மற்றும் பா. ரஞ்சித்தின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 அதில், சார்பேட்டா படத்தில் நடிக்கும் காட்சிகள் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித்து நடித்துக் காண்பிப்பது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் சினிமாவுக்கு வந்து 28 ஆண்டுகள்… டுவிட்டரை தெறிக்க விடும் ரசிகர்கள்…