Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கதை நல்லா இருந்தா போதும்... ‘அருவி’க்கு கிடைத்த பெருமை

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (18:48 IST)
இன்று முதல் சத்யம் மெயின் ஸ்கிரீனில் ‘அருவி’ படம் திரையிடப்பட இருக்கிறது.


 
அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘அருவி’. பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்ட  இந்தப் படத்தில், முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த அதிதி பாலன் முதற்கொண்டு எல்லாருமே புதியவர்கள், ஓரிருவரைத்  தவிர. வித்தியாசமான கதைக்களம், புதுமையான திரை மொழி என எல்லோராலும் கொண்டாடப்பட்டு வருகிறது இந்தப் படம்.
 
முதலில் குறைந்த தியேட்டர்களில் திரையிடப்பட்ட இந்தப் படம், மவுத் டாக் மூலம் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதுவரை சத்யம் மெயின் ஸ்கிரீனில் திரையிடப்படாத இந்தப்படத்தை, இன்று முதல் சத்யம் தியேட்டரின் மெயின் ஸ்கீரினில் கண்டு களிக்கலாம். வார நாட்களில் கூட இந்தப் படத்துக்கு அதிக கூட்டம் வருவதாக தியேட்டர் ஓனர்கள் தெரிவித்துள்ளனர்.
 
கதை நன்றாக இருந்தால் போதும். ரசிகர்கள் அந்தப் படத்தைக் கொண்டாடுவார்கள் என்பதற்கு ‘அருவி’ மிகச்சிறந்த உதாரணம். ‘அறம்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’ என சமீபத்தில் வெளியான படங்களைப் பார்த்து மற்ற இயக்குநர்கள் தங்கள் பாணியை மாற்றிக்கொள்ள வேண்டிய காலகட்டம் இது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷ்கின் – விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’ படத்தின் ரிலீஸ் எப்போது?.. வெளியான தகவல்!

தள்ளிப் போகிறதா அர்ஜுன் தாஸின் ‘ஒன்ஸ் மோர்’ ரிலீஸ்!

ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படத்தின் டைட்டில் & முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் நடிக்கிறாரா அஜித்?

சமீபத்தில் வந்ததில் விடாமுயற்சி டிரைலர்தான் பெஸ்ட்… பாராட்டித் தள்ளிய பிரித்விராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments