Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அருவி - திரைவிமர்சனம்!!

Advertiesment
அருவி - திரைவிமர்சனம்!!
, வெள்ளி, 15 டிசம்பர் 2017 (21:03 IST)
ஹிரோ இல்லாமல் அறிமுக நாயகி அதிதி பாலன் நடிப்பில், அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில், பிந்து மாலினி- வேதாந்த் பரத்வாஜ் இசையில், ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவில் வெளியாகி இருக்கும் படம் அருவி. 
 
பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்லும் அதிதி பாலன் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். கல்லூரியில்  தோழியுடனான நட்பால் பப், பார்ட்டி என ஜாலியாக இருக்க, ஒருநாள் உடல் நிலை சரியில்லாமல் போகிறது. 
 
மருத்துவமனை சிகிச்சைகாக செல்லும் போதுதான் காத்திருக்கிறது அதிர்ச்சி. அவரை பரிசோதித்த மருத்துவர் அதிதிக்கு எச்ஐவி தொற்று இருப்பதாக கூறுகிறார். இதனால் அதிதியின் பெற்றோர் அவரை வெறுத்து ஒதுக்குகின்றனர். 
 
மகள் தவறான வழிக்கு போனதால்தான் அவளுக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டதாக நினைத்து ஒரு கட்டத்தில் அதிதியை வீட்டை விட்டே துரத்திவிடுகின்றனர். வெளியேற்றப்பட்டதும் மேன்சன் ஒன்றில் திருநங்கை ஒருவருடன் தங்குகிறார் அத்தி பாலன். 
 
சிலர் இந்த இளம் பெண்ணின் தனிமை வாழ்க்கையை கண்டு அதில் விளையாட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நியாயம் கேட்க செல்கிறாள். தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் ஏமாற்றப்படுவதை உணரும் அதிதி பாலன் மீடியாவை பழிவாங்க நினைத்து துப்பாக்கியை வைத்து அனைவரையும் மிரட்ட, போலீசாரால் கைது செய்யப்படுகிறார். 
 
பின்னர் மாவோயிஸ்ட் என முத்திரை குத்தப்பட்டு போலீசாரின் விசாரணைக்கு உள்ளாகிறாள். இவ்வாறாக வீட்டை விட்டு வெளியேறியது முதல் அதிதி என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார்? எச்ஐவி தொற்று எப்படி வந்தது? போலீசிடம் இருந்து விடுதலை ஆனாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
 
அருவி என்ற கதாபாத்திரத்தில் அதிதி பாலன் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது நடிப்பு படத்திற்கு பலம். மொத்த படத்தையும் தனது தோளில் தாங்கி செல்கிறார். மற்ற நடிகர்களான லக்‌ஷ்மி கோபாலசாமி, ஷிவதா நாயர், ஸ்வேதா சேகர் உள்ளிட்ட அனைவருமே சிறப்பாக நடித்திருக்கின்றனர். 
 
சிறந்த படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன். படத்தில் கமர்ஷியல் வாசம் வீச வேண்டும் என்பதற்காக இணைத்திருக்கும் காட்சிகள் படத்தின் போக்கை மாற்றுகிறது. 
 
ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. பிந்து மாலினி - வேதாந்த் பரத்வாஜ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசை படத்திற்கு பலம்.  
 
மொத்தத்தில் அருவி சின்கிள் விமன் ஆர்மி....

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொலைகாட்சி நிகழ்ச்சியை வெளிச்சம் போட்டு காட்டுகிறதா அருவி?