Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 14 January 2025
webdunia

தவான் சதத்துடன் எளிதில் வெற்றி பெற்ற இந்தியா: தொடரையும் வென்றதால் ரசிகர்கள் உற்சாகம்

Advertiesment
தவான் சதத்துடன் எளிதில் வெற்றி பெற்ற இந்தியா: தொடரையும் வென்றதால் ரசிகர்கள் உற்சாகம்
, ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (19:56 IST)
விசாகப்பட்டிணத்தில் இன்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 3வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றதோடு, தொடரையும் வென்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 44.5 ஓவர்களில் 215 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தரங்கா மட்டுமே நிலைத்து ஆடி 95 ரன்கள் அடித்தார். இந்தியாவில் குல்தீப் மற்றும் சாகல் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இந்த நிலையில் 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கிய நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா, 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் தவான், மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அதிரடியாக விளையாடி இலக்கை நெருங்க உதவினர். ஸ்ரேயாஸ் ஐயர் 65 ரன்களில் அவுட் ஆனாலும் தவான் இறுதிவரை களத்தில் நின்று வெற்றியை தேடிக் கொடுத்தார்.

இந்திய அணி 32.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 219 ரன்கள் வெற்றி பெற்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துபாய் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் போராடி தோல்வி அடைந்த பி.வி.சிந்து