Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அருண்விஜய்யின் அடுத்த படத்தின் டீசர் எப்போது? சென்சார் தகவல்கள்!

அருண்விஜய்யின் அடுத்த படத்தின் டீசர் எப்போது? சென்சார் தகவல்கள்!
, வியாழன், 7 ஜனவரி 2021 (10:47 IST)
தமிழ் திரையுலகில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் அருண் விஜய், அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பின் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார். தற்போது அவர் ஹீரோவாக நடித்து வரும் படங்கள் நல்ல வெற்றியைப் பெற்று வரும் நிலையில் அவரது நடிப்பில் உருவான படங்களில் ஒன்றான ‘சினம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தில் இருந்தன என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது ‘சினம்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது மட்டுமின்றி இந்த படத்தின் டீசர் சென்சார் சான்றிதழ் பெற்றுள்ளது என்ற தகவல் வெளிவந்துள்ளது. ‘சினம்’ திரைப்படத்தின் டீசருக்கு சென்சார் அதிகாரிகள் ’யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து இந்த படத்தின் டீசர் வரும் பொங்கல் திருநாளில் திரையரங்குகளில் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
‘சினம்’ படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பல்லக் லால்வானி என்பவர் நடித்துள்ளார். அருண்விஜய் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார். கோபிநாத் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை கே.விஜயகுமார் தயாரித்துள்ளார்.  இந்த படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்பு படத்தில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் – இணையத்தில் குவியும் வாழ்த்துகள்!