Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கட்டுமஸ்தான உடலை காட்டி மிரட்டும் அருண் விஜய்!

Advertiesment
கட்டுமஸ்தான உடலை காட்டி மிரட்டும் அருண் விஜய்!
, செவ்வாய், 1 ஜூன் 2021 (16:12 IST)
தமிழ் சினிமாவின் பெயர்போன நட்சத்திர குடும்பங்களில் ஒன்று விஜயகுமாரின் குடும்பம். பழமைவாய்ந்த மிகசிறந்த நடிகரான விஜயகுமாருக்கு வனிதா, ப்ரீதா, ஸ்ரீ தேவி என்ற மூன்று மகள்கள் உள்ளனர். அவரது குடும்பத்தில் உள்ள ஒரே மகன் அருண் விஜய்.
 
சினிமா துறையில் சிறந்து விளங்கிய குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்தாலும் தனது சொந்த முயற்சியால் 22 ஆண்டுகளுக்கு மேல் உழைத்து முன்னுக்கு வந்துள்ளார் அருண் விஜய். இவரை ஹீரோவாக திரையில் கண்டு ரசிக்கும் ரசிகர்களை விட வில்லனாக ரசிக்கும் ரசிகர்களே அதிகம்.
 
கொரோனா ஊரடங்கில் நேரத்தை வீணடிக்காமல் வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி செய்யும் வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டு வரும் அருண் விஜய் தற்போது கட்டான உடலை காட்டி போஸ் கொடுத்து மிரளவைத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் சேதுபதியின் அடுத்த படத்துக்கு கொக்கி போடும் சன் தொலைக்காட்சி!