Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் சேதுபதியின் அடுத்த படத்துக்கு கொக்கி போடும் சன் தொலைக்காட்சி!

விஜய் சேதுபதியின் அடுத்த படத்துக்கு கொக்கி போடும் சன் தொலைக்காட்சி!
, செவ்வாய், 1 ஜூன் 2021 (16:09 IST)
விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்க உள்ளனர் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது. இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் சில காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டன.

இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பை நடத்தினால் மொத்த படமும் முடிந்துவிடும் நிலையில் உள்ளது. இதையடுத்து இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்ற சன் பிக்சர்ஸ் நிறுவனம் முயன்று வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தின் உரிமையையும் இந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் நயன்தாரா படத்தை தயாரிக்கும் எஸ் ஆர் பிரபு!