Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘என்னை அறிந்தால்’ படத்துக்குப் பிறகு ‘இட்லி கடை’தான்.. அருண் விஜய் மகிழ்ச்சி!

vinoth
வியாழன், 25 செப்டம்பர் 2025 (15:19 IST)
தனுஷ் தனது நான்காவது படமாக (இயக்குனராக) ‘இட்லி கடை’ படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்தது.  படத்தை டான் பிக்சர் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக கிரண் கௌஷிக் பணியாற்றுகிறார். படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங் களில் நடித்துள்ளனர்.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படம் அக்டோபர் 1 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதையடுத்து சமீபத்தில் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளன.

இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளது பற்றி பேசியுள்ள அருண் விஜய் “என்னை அறிந்தால் படத்துக்குப் பிறகு நான் நல்ல வில்லன் வேடங்களைத் தேடிக் கொண்டிருந்தேன். இட்லி கடை படத்தில்தான் அந்த வேடம் அமைந்தது.  இந்த படம் என் திரை வாழ்க்கையில் முக்கியமானப் படமாக அமையும். இது போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. தனுஷுடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சுருள்முடி அழகி அனுபமாவின் அழகிய க்ளிக்ஸ்.. வைரல் ஆல்பம்!

மாளவிகா மோகனனின் ஸ்டைலிஷ் போட்டோஷூட் ஆல்பம்!

‘என்னை அறிந்தால்’ படத்துக்குப் பிறகு ‘இட்லி கடை’தான்.. அருண் விஜய் மகிழ்ச்சி!

விரைவில் சமந்தாவுக்குத் திருமணமா?... இணையத்தில் பரவும் தகவல்!

‘மனதை திருடிவிட்டாய்’ இயக்குனர் நாராயண மூர்த்தி காலமானார்!

அடுத்த கட்டுரையில்
Show comments