Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகளை வைத்து அர்ஜுன் இயக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

மகளை வைத்து அர்ஜுன் இயக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

vinoth

, புதன், 16 அக்டோபர் 2024 (14:43 IST)
நடிகர் அர்ஜுன் தமிழ் மற்றும் கன்னட சினிமாவில் மிக முக்கியமான நடிகராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் சில படங்களை இயக்கியும் உள்ளார். இந்நிலையில் தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவை தெலுங்கில் அறிமுகப்படுத்த ஒரு படத்தை இயக்க ஆயத்தமானார்.

ஆனால் அந்த படத்தின் கதாநாயகனுக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்படம் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் இப்போது அதே படத்தை உபேந்திராவின் அண்ணன் மகன் நிரஞ்சனைக் கதாநாயகனாக்கி இயக்குகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி  நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க சத்யராஜை ஒப்பந்தம் செய்துள்ளாராம் அர்ஜுன். படத்தில் சத்யராஜ், கதாநாயகியின் அப்பா வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்துக்கு ‘சீதா பயணம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அர்ஜுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னை ராசியில்லாத இசையமைப்பாளர்னு முத்திரைக் குத்திட்டாங்க.. அஜித் மட்டும்தான் நம்பினார்- மனம் திறந்த யுவன்!