Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புஷ்பா 2 ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா?.. ஆனாலும் ரசிகர்கள் ஹேப்பிதான்!

Advertiesment
புஷ்பா 2 ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா?.. ஆனாலும் ரசிகர்கள் ஹேப்பிதான்!

vinoth

, சனி, 12 அக்டோபர் 2024 (18:23 IST)
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. இந்த படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர். தற்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது படம் ஒரு நாள் முன்னதாக டிசம்பர் 5 ஆம் தேதியே ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. தற்போது பெரிய நடிகர்களின் படங்கள் வியாழக் கிழமையே ரிலீஸாவதால் புஷ்பா 2 படமும் ஒருநாள் முன்னதாக ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டீசர்லயே இத்தனை படத்துல இருந்து காப்பியா? - சிரஞ்சீவியின் விஸ்வம்பரா டீசரை கலாய்க்கும் நெட்டிசன்கள்!