Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லவ் மேரேஜா? அரஞ்சுட் மேரேஜா?... நோ மேரேஜ் – கவனம் ஈர்க்கும் ஒன்ஸ்மோர் டீசர்!

லவ் மேரேஜா? அரஞ்சுட் மேரேஜா?... நோ மேரேஜ் – கவனம் ஈர்க்கும் ஒன்ஸ்மோர் டீசர்!

vinoth

, சனி, 5 அக்டோபர் 2024 (18:11 IST)
கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும்  குவித்தது. இதையடுத்து அதே தயாரிப்பு நிறுவனமான மில்லியன் டாலர்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் மீண்டும் மணிகண்டன் நடிப்பில் லவ்வர் திரைப்படத்தைத் தயாரித்தது. அந்த படமும் சுமாரான வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில் இப்போது இந்த நிறுவனம் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகும் படத்தைத் தயாரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் என்பவர் இயக்கிவருகிறார்.

இந்நிலையில் இந்த படத்துக்கு பழைய விஜய் பட டைட்டிலான ஒன்ஸ்மோர் என்பது டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர் தற்போது ரிலீஸாகி கவனம் ஈர்த்துள்ளது. காதல் ஆசை இல்லாத இருக்கமான ஆணுக்கும் அவனை காதலிக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவை மையப்படுத்தியதா இருக்கும் என தெரிகிறது. படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீஸாகவுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு