Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரவுண்டு கட்டிய மீடியா குரூப்பிஷம் - ஒத்த ஆளா நின்னு சமாளிக்கும் பாலா!

Advertiesment
ரவுண்டு கட்டிய மீடியா குரூப்பிஷம் - ஒத்த ஆளா நின்னு சமாளிக்கும் பாலா!
, செவ்வாய், 27 அக்டோபர் 2020 (12:52 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோட் ஆயுத பூஜை என்பதால் வீட்டில் சண்டை, சர்ச்சரவுகள் இல்லாமல் போட்டியாளர்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்பது போல் குடும்பத்துடன் குதூகலமாக இருந்தனர்.

அதற்குள் இன்றைய முதல் ப்ரோமோவில் அனிதா அழ ஆரம்பித்துவிட்டார். உண்மையில் அனிதாவால் எந்த ஒரு தோல்வியும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தன்னை சுற்றி இருப்பவர்கள் தன்னை தவிர வேறு யாரையும் பெருமையாக பேசுவதை பொறுத்துக்கொள்ளவும் முடியவில்லை. தான் தவறு செய்தாலும் அதை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவமும் அவரிடம் இல்லை.

போட்டியில் தோற்று வெளியேறி விடுவோமோ தனக்கு கெட்ட பெயர் வந்துவிடுமோ என்று மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளார். எதற்கெடுத்தாலும் அழுது புலம்பிக்கொண்டே இருப்பதும் ஒரு வித மனோ வியாதி தான். என்ன தான் அனிதா அழுதாலும் சுரேஷிடம் முழு மனதோடு மன்னிப்பு கேட்கவில்லை. அவ்வளவு சோகம் மனசுல இருக்குன்னு சொல்றாங்க, ஆனால், ரியோவிடம் நக்கலாக பேசி சிரிக்கிறார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பாலா வீட்டில் உள்ள போட்டியாளர்களை அடுத்தவராம் முழுக்க உட்காரவச்சு அம்மி அரைக்க விடுவேன் என்று சொன்னதை அர்ச்சனா , ரியோ , நிஷா , வேல்முருகன் உள்ளிட்ட குரூப்பிஸம் டீம் ஒட்டுமொத்தமாக அவரை கண்டித்து தீட்டுகிறார்கள். ப்ரோமோவை பார்த்து சொல்லமுடியாது. யாரு மேல தப்புன்னு நாளைக்கு சொல்றோம். ஏனென்றால், ப்ரொமோல அப்படிதான் கட்டுவாங்க அப்பறோம் எப்பிசோட்ல அம்மிலயும் அரைக்கலாம்னு சொல்லி முடிச்சுடுவாங்க. பாலாவுக்கு இருக்குற வாய்க்கு அர்ச்சனாவிடம் சமயம் பார்த்து வசமா மாட்டிகிட்டாரு... இனி நீயே நினைச்சாலும் தப்பிக்க முடியாது தம்பி. அவ்வளவு என்..? அம்மி கண்டுபிடிச்சவங்க  குடும்பம் வரைக்கும் சண்டைக்கு கூப்பிடுவாங்க..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குறும்படம் இயக்கி விருது பெற்ற நடிகை… அட இவருக்குள் இவ்வளவு திறமையா?