Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தந்தை பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: ‘அறம்’ இயக்குனர் கோபி நயினார் அறிவிப்பு..!

Advertiesment
தந்தை பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: ‘அறம்’ இயக்குனர் கோபி நயினார் அறிவிப்பு..!

Siva

, வியாழன், 20 மார்ச் 2025 (16:57 IST)
திராவிட கழகம் அளித்த தந்தை பெரியார் விருதை திருப்பி அளிக்கிறேன் என நயன்தாரா நடித்த அறம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கோபி நயினார் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த அறம் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்திற்கு திராவிடர் கழகம் விருது அளித்து பாராட்டு தெரிவித்தது. இந்த நிலையில் இந்த விருதைதான் திருப்பி அளிப்பதாக நான் அறம் இயக்குனர் கோபி நயினார் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
தலித் மக்களுக்கு குடிமனை கேட்டும் அவர்களின் வாழ்நிலங்களில் மண் அள்ளுவதை தடுக்க கோரியும் போராடியதற்காக பெரியாரிய சிந்தனையாளர்களால் நான் மிகவும் கேவலமாக பொதுவெளியில் இழிவுபடுத்தப்படுகிறேன். தன்னை ஜனநாயக அமைப்பு என்று கூறிக்கொள்கின்ற ஒரு அமைப்பை எதிர்த்து ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பினால் சர்வாதிகார மனநிலையோடு அது என்னை எதிர்கொள்கிறது. 
 
இத்தகைய சூழலில் இந்த சர்வாதிகார மனநிலை கொண்டவர்களின் மத்தியில் வாழ்வதற்கே எனக்கு அச்சமூட்டுகிறது. தமிழகம் முழுவதும் தலித் மக்களின் நிலை இது தான் என்று நம்புகிறேன் தமிழ்நாட்டில் ஒரு தலித் ஒரு ஜனநாயக சிந்தனையோடு அரசியல் கேள்விகளை எழுப்புவது பெரியாரிய சிந்தனையாளர்களுக்கு திராவிட சிந்தாந்தவாதிகளுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது. 
 
இது ஒரு சர்வாதிகார போக்கின் மனநிலை.இந்த சூழலில் இன்று கடுமையாக அவமதிக்கப்படுகிற நான் எதிர்காலத்தில் இவர்களால் கொல்லப்படவும் நேரிடலாம் இந்திய முழுக்க நடக்கின்ற அறிவுஜீவிகளின் சமூக செயற்பாடட்டாளர்கள் கலைஞர்கள் மீது நடந்த படுகொலைக்கும் எதிர்காலத்தில் எனக்கு நிகழ போகும் படுகொலைக்கும் பெரிய வேறுபாடு இல்லை. 
 
நான் அறம் என்கிற திரைப்படத்தை இயக்கினேன் அத்திரைப்படத்தை கருத்து என்னவென்றால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு துயரமென்றால் இந்த அரசு எதுவும் செய்யாது என்பதே. அதற்காக தான் திராவிடர் கழகம் என்னை பாராட்டி தந்தை பெரியார் விருது வழங்கியது. 
 
நிகழ்காலத்தில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் போராட்டங்களை முன்னெடுக்கும் போது இந்த செயல் என்னை அவமானப்படுத்துகிறது. அறம் என்ற கதைக்கு விருது வழங்கி கொண்டாடிய திராவிடர் கழகம் நிஜ வாழ்வில் நடைமுறைப்படுத்தும் போது என்னை இந்த சமூகத்தின் எதிரியாக சித்திரிக்கிறது. இது போன்ற காரணுங்களுக்காக அறம் திரைப்படத்திற்காக திராவிடர் கழகம் எனக்கு வழங்கிய பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன் என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெக்கேஷனை எஞ்சாய் பண்ணும் ரகுல்.. க்யூட் போட்டோஸ்!