Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேரழிவு.... எஸ்.பி.பி மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்!

Advertiesment
பேரழிவு.... எஸ்.பி.பி மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்!
, வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (17:06 IST)
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் இன்று பிற்பகல் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் இடியாய் விழுந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கம் வீட்டிற்கு அவர் உடல் கொண்டுவரப்பட்டுள்ளது.

நாளை மதியம் செங்குன்றத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பி உடலின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது.

தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், இசை ரசிகர்கள் என பலரும் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தற்ப்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் " பேரழிவு... என பதிவிட்டு வார்த்தை கூற முடியாத அளவிற்கு மனமுடைந்து RIP எஸ்பிபி என மிகுந்த வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கு என்ன பேசறதுன்னு தெரியில…கண்களங்கிய யோகிபாபுவின் வைரல் வீடியோ