Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 13 April 2025
webdunia

ஏன் ரஹ்மான் மட்டும் கம்மியா சம்பளம் வாங்கணும் – பிரபாஸ் பட விவகாரத்தில் கொந்தளிக்கும் ரசிகர்கள்!

Advertiesment
AR Rahman
, செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (17:29 IST)
பிரபாஸ் படத்துக்கு இசையமைக்க அதிக சம்பளம் கேட்டதாக ஏ ஆர் ரஹ்மான் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில் இப்போது அதற்கு ரசிகர்கள் சிலர் பதிலளித்துள்ளனர்.

இந்திய சினிமாவில் பாகுபலி ஒரு வசூல் சாதனையை நிகழ்த்தியது. இதில் நாயகனாக நடித்த பிரபாஸ் உலகம் அளவில் பாப்புலர் ஆகிவிட்டார். இதனால் அவர் சம்பளமும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இப்படத்தை அடுத்து, அவர் நடிப்பில் வெளியான் சாஹோ மிகப் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு படுதோல்வி அடைந்தது. தற்போது அவர் ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, மகாநதி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் எனபவரின் படத்தில் நடிக்கவுள்ளார். இதில் பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என பிரபாஸ் நினைத்ததாகவும்,  ஆனால் இப்படத்தில் பணியாற்ற ரஹ்மான் 4 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகிறது.ஆனால் அவ்வளவு சம்பளம் கொடுக்க படக்குழு விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக ரஹ்மான் அதிக சம்பளம் கேட்பதாக இணையதளத்தில் அவர் மேல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டன.

இதனால் கடுப்பான ரஹ்மான் ரசிகர்கள் படத்தின் பட்ஜெட் 300 கோடிக்கும் மேல், பிரபாஸ் சம்பளமே 100 கோடியைத் தொடும், ஆனால் ஆஸ்கர் விருது வரை வாங்கிய இந்தியா முழுவதும் இசைக்கென மார்க்கெட் உள்ள ரஹ்மான் மட்டும் 4 கோடி வாங்கக்கூடாதா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். நியாயம்தானே பாஸ்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வலிமை படத்தில அஜித்துக்கு இந்த வாட்டி ப்ரோமோஷன் – ஹெச் வினோத் செய்த மாற்றம்!