இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் மற்றும் இசைஞானி இளையராஜா ஆகிய இருவரும் வெளிநாடு சென்றிருந்த நிலையில் இருவரும் ஒரே நாளில் சென்னை திரும்பியுள்ளனர்
கனடாவில் இசை நிகழ்ச்சி நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் ஏ ஆர் ரகுமான் சென்றிருந்தார் என்பது அதேபோல் இசை பணிகளுக்காக இசைஞானி இளையராஜா வெளிநாடு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று இளையராஜா, ஏஆர் ரகுமான் ஆகிய இருவரும் சென்னைக்கு திரும்பி உள்ளனர். சென்னை விமான நிலையத்தில் இருவரும் எதிர்பாராமல் சந்தித்த நிலையில் இது குறித்த வீடியோவை ஏஆர் ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்
இருவரும் சென்றது வெவ்வேறு கண்டங்களாக இருந்தாலும் திரும்பி வருவது ஒரே இடம்தான் அது தமிழ்நாடு என்று ஏஆர் ரகுமான் பதிவு செய்துள்ள இந்த பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது