Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உண்மையயில் கல்லூரி விழாவில் என்ன நடந்தது?.... முதல் முறையாக பேசிய அபர்ணா!

Advertiesment
உண்மையயில் கல்லூரி விழாவில் என்ன நடந்தது?.... முதல் முறையாக பேசிய அபர்ணா!
, புதன், 25 ஜனவரி 2023 (10:03 IST)
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் அபர்ணா திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றுக்காக எர்ணாகுளத்தில் உள்ள சட்டக் கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார். 

அப்போது அவரை வரவேற்ற கல்லூரி மாணவர் ஒருவர் அவருக்கு கை கொடுத்ததோடு அவர் தோளின் மீது கை போட முயன்றார். அதை தர்மசங்கடத்தோடும் தடுத்த அபர்ணா குறித்த வீடியோ இணையதளங்களில் வெளியானது. இதையடுத்து சம்மந்தப்பட்ட மாணவர் மன்னிப்புக் கேட்ட பின்னரும் அவர் 7 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் மற்றொரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அபர்ணாவிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் “வீடியோவில் பார்த்தது உண்மைதான். முன்பின் தெரியாதவர்கள் அதுபோல நடந்துகொள்வது அருவருப்பாக உள்ளது. சம்மந்தப்பட்ட நபர் மீது நான் எந்த புகாரையும் கொடுக்கவில்லை. அது சட்டக் கல்லூரி என்பதால் அவர்களே நடவடிக்கை எடுத்துள்ளார்கள். அதுவே போதுமானதாக இருந்தது” எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தள்ளிப் போகும் தளபதி 67 பட ப்ரமோஷன் வீடியோ ரிலீஸ்