Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல் முறையாக மலையாள படத்தில் நடிக்கும் அனுஷ்கா!

முதல் முறையாக மலையாள படத்தில் நடிக்கும் அனுஷ்கா!
, வியாழன், 26 அக்டோபர் 2023 (14:16 IST)
தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.

கடைசியாக பாகுபலி படத்தில் நடித்த அனுஷ்கா, அதன் பின்னர் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. மேலும் அவரின் உடல் எடையும் ஏறி குண்டாக காணப்பட்டார். அதனால் அவர் சினிமாவை விட்டு விலகி எடைகுறைப்பில் ஈடுபட்டார்.

கடைசியாக அவர் தெலுங்கில் “மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் இப்போது அனுஷ்கா முதல் முறையாக ஒரு மலையாள படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்தியின் அடுத்த படத்தில் எம் ஜி ஆராக நடிக்கும் பிரபல நடிகர்!