Publish Date: Mon, 23 Oct 2023 (12:22 IST)
Updated Date: Mon, 23 Oct 2023 (12:29 IST)
இந்திய அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மா இந்த உலகக் கோப்பை தொடரில் அதிகமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அனைத்து போட்டிகளிலும் சில பல சிக்ஸர்களை விளாசி வரும் அவர் நேற்றைய போட்டியில் நியுசிலாந்து அணிக்கு எதிராக நான்கு சிக்ஸர்கள் விளாசினார்.
இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் 40 சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். டிவில்லியர்ஸின் சாதனையை முறியடித்துள்ள அவர் இன்னும் கிறிஸ் கெய்லின் சாதனையை மட்டும் முந்தவில்லை. கிறிஸ் கெயல் உலகக் கோப்பை தொடரில் 49 சிக்ஸர்கள் விளாசி முதல் இடத்தில் உள்ளார்.