Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் அஞ்சலி

Webdunia
வியாழன், 22 மார்ச் 2018 (11:37 IST)
இரண்டாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கவுள்ளார் அஞ்சலி.



கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘இறைவி’ படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார் அஞ்சலி. தற்போது இரண்டாவது முறையாக இன்னொரு படத்திலும் ஜோடியாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை அருண் குமார் இயக்குகிறார். ‘பண்ணையாரும் பத்மினியும்’ மற்றும் ‘சேதுபதி’ படங்களை இயக்கியவர் அருண் குமார். இந்த இரண்டு படங்களிலுமே விஜய் சேதுபதி தான் ஹீரோ. தற்போது மூன்றாவது முறையாகவும் விஜய் சேதுபதியைத்தான் இயக்குகிறார் அருண் குமார். மே மாதம் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் எனத் தெரிகிறது. மலேசியா, தென்காசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஷூட்டிங்கை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ‘பாகுபலி 2’ படத்தை ரிலீஸ் செய்த கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கலாம் என்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிருத் இசைக்காக ஒரு தடவை பார்க்கலாம்.. விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ விமர்சனம்..!

71வது தேசிய விருது அறிவிப்பு.. ஹரிஷ் கல்யாண் நடித்த படத்திற்கு சிறந்த பட விருது..!

ரஜினியின் ‘கூலி’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்த சென்சார்.. வன்முறை அதிகமா?

பாக்ஸ் ஆபிஸில் அசத்தும் 'மகாவதாரம் நரசிம்மா': ரூ.53 கோடி வசூல் சாதனை

அடுத்தடுத்த டிராப்புகள்.. தேசிய விருது வாங்கிய வெற்றிமாறனுக்கே இந்த நிலைமையா?

அடுத்த கட்டுரையில்
Show comments