Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுக சார்பில் நடராஜனுக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

அதிமுக சார்பில் நடராஜனுக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
, புதன், 21 மார்ச் 2018 (11:55 IST)
உடல்நலக்குறைவால் காலமான நடராஜனின் உடலுக்கு அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தாதது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.
சசிகலாவின் கணவரும் பத்திரிகையாளரும், அரசியல் ஆலோசகருமான நடராஜன் நேற்று அதிகாலை உடல்நலக்கோளாறால் காலமானார். அவருக்கு வயது 74. நடராஜனின் மறைவுக்கு பிரபல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 15 நாள் பரோலில் வெளியே வந்திருக்கும் சசிகலா நடராஜனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். நடராஜனின் உடல் தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே இன்று மாலை அடக்கம் செய்யப்படும் என சசிகலாவின் சகோதர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் சசிகலாவை சின்னம்மா சின்னம்மா என்று அழைத்தீர்களே, அவரது கணவர் நடராஜன் தற்பொழுது இறந்து விட்டார். அதிமுக சார்பிலிருந்து ஒருவர் கூட இதற்கு இரங்கல் தெரிவிக்கவில்லை என செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் சசிகலா குடும்பத்தினருடன் ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று முடிவெடுத்தபின் நடராஜன் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டர்கள் என பதிலளித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செப்.22ம் தேதி என்ன நடந்தது? - சசிகலா பரபரப்பு வாக்குமூலம்