Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடராஜன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Advertiesment
நடராஜன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி
, செவ்வாய், 20 மார்ச் 2018 (08:41 IST)
பிரபல பத்திரிகையாளரும், அரசியல் ஆலோசகரும் சசிகலா கணவருமான நடராஜன் இன்று காலை மரணம் அடைந்த நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனார்.

இந்த வகையில் சற்றுமுன்னர் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பெசண்ட் நகரில் உள்ள நடராஜனின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் துரைமுருகன், பொன்முடி , எ.வ.வேலு உள்ளிட்ட திமுக பிரமுகர்களும் உடனிருந்தனர். நடராஜன் மறைவு குறித்து ஸ்டாலின் கூறியபோது, 'நடராஜனின் மறைவு அதிர்ச்சி அளிக்கின்றது. திராவிட இயக்கங்களின் மீது அளவு கடந்த பற்று கொண்டவர். மாணவர் பருவத்திலேயே பல போராட்டங்களில் பங்கு பெற்றவர். அவரது மறைவு தமிழுக்கு பெரும் இழப்பு என்று கூறினார்.

மேலும் சமீபத்தில் தினகரன் அணியில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத் அவர்களும் நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கணவனின் இறுதிச் சடங்கில் பங்கேறக பரோலில் வருகிறார் சசிகலா