நடிகை சம்யுக்தா சண்முகநாதன், இன்று மறுமணம் செய்துகொண்டார். 'வாரிசு', 'துக்ளக் தர்பார்' உள்ளிட்ட படங்களில் இவர் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற வீரர் ஸ்ரீகாந்த்தின் மகனான அனிருதா ஸ்ரீகாந்த் என்பவரை சம்யுக்தா திருமணம் செய்துகொண்டார்.
நடிகை சம்யுக்தா ஏற்கனவே விவாகரத்து பெற்று ஒரு மகனுடன் இருக்கிறார். இதேபோல், மணமகன் அனிருதா ஸ்ரீகாந்த்தும் விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமண விழாவில் கலந்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரைப்படங்கள் மட்டுமல்லாமல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பர மாடலாகவும் நடிகை சம்யுக்தா சண்முகநாதன் அறியப்படுகிறார். இவர் இதுவரை 'மதராஸ் மாஃபியா கம்பெனி' உட்படப் பத்து திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார்.