Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாரா கலைக்கூடம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "ஆகக்கடவன"

Advertiesment
சாரா கலைக்கூடம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம்

J.Durai

, திங்கள், 23 செப்டம்பர் 2024 (10:50 IST)
"ஆகக்கடவன" திரைப்படத்தில் புதுமுகமான ஆதிரன் சுரேஷ் கதை நாயகனாக நடித்துள்ளார்.இவர் நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சியில் வந்த சில குறும்படங்களிலும் அட்டக்கத்தி, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார்.
 
இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் வின்சென்ட், சி ஆர் ராகுல், மைக்கேல், ராஜசிவன், சதீஷ் ராமதாஸ், தட்சணா மற்றும் நிவாஸ் நடித்துள்ளனர். 
 
இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் சென்னை திரைப்படக் கல்லூரியில்
பயின்ற முன்னாள் மாணவரான தர்மா,
 
திரைப்படக் கல்லூரியில் இவர் இயக்கிய ஒரு குறும்படம் 3 மாநில விருதுகளை பெற்றுள்ளார்.
 
இப்படத்திற்கு ஒளிப்பதிவு லியோ வெ ராஜா, இசை சாந்தன் அன்பழகன், படத்தொகுப்பை சுமித் பாண்டியன் மற்றும் புமேஷ் தாஸ் இணைந்து  செய்து இருக்கிறார்கள்
 
இப்படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன, பாடல் வரிகளை விக்கி எழுத,வல்லவன் மற்றும் விக்கி  பாடியுள்ளனர்,
 
இப்படத்தைப் பற்றி இயக்குனர் தர்மா கூறுகையில்.....
 
எண்ணம் போல் வாழ்க்கை என்பார்கள், ஆனால் நானோ நாம் பேசும் சொற்களை பொருத்தும் நம் வாழ்க்கை அமையும் என்பேன்.
 
அதாவது, ஒருவர் வாயிலிருந்து வரும் வார்த்தையே அவர் வாழ்வின் நன்மை, தீமையை தீர்மானிக்கும், ஆம் ஒருவர் நன்மையானவற்றை பேசினால் அவர் வாழ்வில் நல்லதே நடக்கும் இதுவே எதிர்வினைக்கும் பொருந்தும் என்பதே பிரபஞ்ச விதி, இதை மையமாகக் கொண்டுதான் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது, 
 
இதற்கு இயல்பாக நடிக்க கூடிய புதுமுக நடிகர்கள் தேவைப்பட்டார்கள் அவர்களின் இயல்பான நடிப்பாலும் விறு விறுப்பான திரை கதையாலும் இப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை தரும் என்றார்.
 
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அடுத்துள்ள குன்றத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி, தலைவாசல், சின்ன சேலம், சிறுவாச்சூர், கல்லாநத்தம்,தகரை போன்ற இடங்களில் படபிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
 
தற்போது போஸ்ட் ப்ரோடுக்ஷன் இறுதி கட்டப் பணிகள் நடை பெற்று வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

24000 நடன அசைவுகள்.. கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி!