பிரபல இசைக்குழுவான Cold Play-வின் இசை நிகழ்ச்சி இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் டிக்கெட் முன்பதிவில் புக் மை ஷோ தளமே முடங்கிய சம்பவம் நடந்துள்ளது.
இந்தியாவில் ஆங்கில இசைக்கலைஞர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பொதுவாக ஆங்கில இசைக்கலைஞர்கள் World Tour இசை நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கமாக உள்ள நிலையில் சமீபமாக இந்தியாவில் இவ்வாறான வேர்ல்ட் டூர் இசை நிகழ்ச்சிகள் அதிகரித்துள்ளது.
பிரபலமான ஆங்கில ராக் பேண்ட் இசைக்குழுவான கோல்ட் ப்ளே அவ்வாறாக மும்பையில் வருகிற ஜனவரி 18 மற்றும் 19ம் தேதிகளில் Music of the spheres என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். இதற்காக குறைந்த பட்சம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையிலான டிக்கெட்டுகள் Book My Show தளத்தில் விற்பனைக்கு வந்தது.
டிக்கெட் விற்பனைக்கு வந்த சில நிமிடங்களிலேயே ஏராளமானோர் டிக்கெட் முன்பதிவு செய்ய தளத்தில் நுழைந்ததால் புக் மை ஷோ தளமே முடங்கியது. சுமார் 1.5 கோடி பேர் ஒரே நேரத்தில் தளத்தில் நுழைந்ததால் இந்த முடக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. தளம் சரிசெய்யப்பட்ட சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது.
இதனால் ரசிகர்கள் பலர் ஏமாற்றம் அடைந்த நிலையில் ரசிகர்களுக்காக ஜனவரி 21ம் தேதியும் ஒரு நிகழ்ச்சி நடத்துவதாக கோல்ட் ப்ளே இசைக்குழு அறிவித்துள்ளது.
Edit by Prasanth.K