அனிமல் 2 கண்டிப்பாக உருவாகும்… இயக்குனர் சந்தீப் ரெட்டி தகவல்!

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2023 (09:18 IST)
விஜய் தேவரகொண்டா நடித்த ’அர்ஜுன் ரெட்டி’என்ற படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இப்போது ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து  அனிமல் படத்தை இயக்கியுள்ளார்.  இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர்களான அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். அனிமல் படம் பெண்ணடிமைத் தனத்தை விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆனாலும் இந்த படம் வசூலில் இந்தியா முழுவதும் கலக்கி வருகிறது. முதல் நாளில் 116 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்த இந்த திரைப்படம் அடுத்தடுத்த நாட்களிலும் குறையாமல் வசூல் வேட்டை நடத்தியது. படம் ரிலீஸாகி ஒரு வாரத்தில் 527 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இப்போது படம் ரிலீஸாகி 17 நாட்கள் கடந்துள்ள நிலையில் 835 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது. விரைவில் இந்த படம் 1000 கோடி ரூபாய் வசூலை எட்டிவிடும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா “அனிமல் இரண்டாம் பாகம் “அனிமல் பார்க்” என்ற பெயரில் வெளியாகும். ஆனால் அதன் ஷூட்டிங் 2025 ஆம் ஆண்டுதான் தொடங்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

3000 கோடி ரூபாய் சொத்தை வேண்டாம் என சொன்ன ஜேசி சான்… ஜாக்கி சான் பெருமிதம்!

திரையரங்கில் எடுபடாத ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நான் ஏன் காப்புரிமைக் கேட்பதில்லை… இசையமைப்பாளர் தேவா சொன்ன ‘குட்டி ஸ்டோரி’

விமர்சனங்கள்தான் என்னைக் கடுமையாக உழைக்க வைக்கின்றன… சாய் அப்யங்கர் பாசிட்டிவ் பேச்சு!

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் லிஸ்ட்டில் இணைந்த ஆர் ஜே பாலாஜி!

அடுத்த கட்டுரையில்
Show comments