ஆஸ்கர் விருதுப் பட்டியலில் இருந்து வெளியேறிய இந்திய திரைப்படம் ‘2018’!

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2023 (09:14 IST)
இந்த ஆண்டு மலையாளத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற  திரைப்படம் டோவினோ தாமஸ் நடித்துள்ள 2018. கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஒட்டி இந்த படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஜூட் ஆண்டனி. இந்த படம் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து மலையாள சினிமாவின் அதிகபட்ச வசூல் செய்த படமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியாவின் சார்பில் ஆஸ்கருக்கு செல்லும் படமாக 2018 படம் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து படக்குழுவினருக்கு வாழ்த்துகள் குவிந்துள்ளன. இதையடுத்து இந்த படத்தை அமெரிக்காவில் ப்ரமோட் செய்யும் விதமாக இப்போது தெற்கு அமெரிக்காவில் 400 திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்தனர்.

இந்நிலையில் இப்போது ஆஸ்கர் விருதின் பட்டியலில் இருந்து 2018 திரைப்படம் வெளியேறியுள்ளது. இறுதி நாமினேஷன் சுற்றுக்குக் கூட இந்த படம் செல்லவில்லை என்பது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒன்றாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

25 நாட்களில் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய்.. ‘பைசன்’ அசத்தல் வசூல்!

’பேட் கேர்ள்’ படம் சிரிக்கவும் அழவும் வைத்தது… பிரபல நடிகை பாராட்டு!

அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப் போகும் வெங்கட்பிரபு படம் –சிவகார்த்திகேயன்தான் காரணமா?

DC படத்துக்காக இத்தனைக் கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாரா லோகேஷ்?

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்தை நிராகரித்தாரா துல்கர் சல்மான்? – காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments