Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ… நான்கு பேரிடம் டெல்லி போலிஸார் விசாரணை!

Advertiesment
ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ… நான்கு பேரிடம் டெல்லி போலிஸார் விசாரணை!
, வியாழன், 21 டிசம்பர் 2023 (08:32 IST)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கீத கோவிந்தம், தேவ்தாஸ், டியர் காம்ரேட், சுல்தான்,. புஷ்பா, வாரிசு, அனிமல் ஆகிய படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமாக உள்ளார். இந்த நிலையில்,  ஏஐ தொழில் நுட்பத்தால் ஆபாசமாக உருவாக்கப்பட்ட தனது DeepFake Edit வீடியோ இணையதளத்தில் வைரலாகிவரும் நிலையில் நடிகை ராஷ்மிகா வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் “தொழில்  நுட்பம் மூலம் இப்படி தவறானப் பயன்படுத்தப்படுவதை பார்த்தால் பயமாக இருக்கிறது. இது எனது பள்ளி, கல்லூரி காலங்களில் நடந்திருந்தால் அதனை எப்படி சமாளித்திருப்பேன் என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இதனால் பலர் பாதிக்கப்படும் முன்பு இதுபற்றி தெரியப்படுத்த வேண்டும்” என வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  அவர்கள் இது குறித்து கூறிய போது Deep Fake தொழில்நுட்ப மூலம் உருவாக்கப்படும் போலி வீடியோக்களை கண்டறிதல், அவற்றை தடுத்தல், புகார் அளித்தல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய நான்கு கோணங்களில் கவனம் செலுத்த போவதாக அறிவித்திருந்தார்.

இதுபோன்ற அவதூறு செயல்களில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்திருந்தது. இந்நிலையில் இப்போது இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரிடம் டெல்லி போலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த வீடியோவை உருவாக்கியவர்கள் மற்றும் இணையத்தில் பதிவேற்றியவர்களை தேடி வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூன்று மடங்கு சமபளம்… நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமான யோகி பாபு!