Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மிரட்டும் கண்கள்… வித்தியாசமான மேக்கப்… நடிகை அமலா பாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

மிரட்டும் கண்கள்… வித்தியாசமான மேக்கப்… நடிகை அமலா பாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
, திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (08:39 IST)
நடிகை அமலா பால் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் மைனா படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். இடையில் அவர் திருமணம் செய்துகொண்டு குறுகிய காலத்திலேயே விவாகரத்தும் செய்தார்.

இதையடுத்து இப்போது தொடர்ச்சியாக துணிச்சலான மற்றும் சர்ச்சையானக் கதாபாத்திரங்களாகவே தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனால் இப்போது முன்புபோல அவருக்கு அதிக வாய்ப்புகள் இல்லை. இதையடுத்து அவர் நடித்த கடாவர் என்ற திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி சிறிய அளவில் கவனம் பெற்றது.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வித்தியாசமான மேக்கப்பில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன. 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சிகளைப் படமாக்கவே இல்லை…” பிசாசு 2 பற்றி இயக்குனர் மிஷ்கின்!