Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதே புடவை… அதே நான்… ஆனா 10 வருஷத்துக்கு அப்புறம் – ஆண்ட்ரியா பகிர்ந்த throwback புகைப்படம்!

அதே புடவை… அதே நான்… ஆனா 10 வருஷத்துக்கு அப்புறம் – ஆண்ட்ரியா பகிர்ந்த throwback புகைப்படம்!
, வெள்ளி, 27 மே 2022 (09:08 IST)
நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படம் கவனத்தைப் பெற்றுள்ளது.

நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார். இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். தற்போது அவர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. அதில் கமல் மற்றும் பூஜா ஹெக்டேவுடன் ‘உத்தம வில்லன்’ பட சமயத்தில் இருக்கும் புகைப்படத்தையும் தற்போது ஆண்ட்ரியா எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ள அவர் இரண்டு புகைப்படங்களிலும் ஒரே புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தோடு “அதே புடவை  அதே நான் 10 வருடங்களுக்குப் பிறகு” என தெரிவித்துள்ளார்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

KGF ஹீரோ யாஷின் அடுத்த படத்தை இயக்கப்போகும் இயக்குனர் இவரா? வெளியான தகவல்!