Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

KGF ஹீரோ யாஷின் அடுத்த படத்தை இயக்கப்போகும் இயக்குனர் இவரா? வெளியான தகவல்!

KGF ஹீரோ யாஷின் அடுத்த படத்தை இயக்கப்போகும் இயக்குனர் இவரா? வெளியான தகவல்!
, வெள்ளி, 27 மே 2022 (09:07 IST)
கேஜிஎஃப் இரண்டு பாகங்களில் நடித்ததன் மூலம் தற்போது இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகராகியுள்ளார் யாஷ்.

யாஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியான படம் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் சாப்டர் 2. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த பாகத்திற்கான லீடும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் யாஷ் இப்போது இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நடிகராகியுள்ளார் யாஷ். இனிமேல் அவர் பேன் இந்தியா திரைப்படங்களில் மட்டுமே நடிப்பார் என்று கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் யாஷின் அடுத்த படம் குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. யாஷின் அடுத்த படத்தை ‘மஃப்டி’ படத்தின் இயக்குனர் நர்தன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நர்தன் இயக்கிய மஃப்டி திரைப்படம்தான் தற்போது சிம்பு நடிப்பில் பத்துதல என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. முதலில் இந்த படத்தை இயக்கவும் நர்தன் தான் ஒப்பந்தம் ஆனார். ஆனால் பின்னர் அவர் வெளியேற தற்போது கிருஷ்ணா இயக்கி வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடித்த 3 படங்களும் ஹிட்… தனுஷ் படத்தில் இணைகிறாரா பிரியங்கா மோகன்? வெளியான தகவல்!