இந்த நிதியாண்டில் மட்டும் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் 120 கோடி ரூபாய் வரி செலுத்தியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2024-25 ஆம் ஆண்டுக்கான வரி தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், இந்த நிதியாண்டில் மட்டும் அமிதாப் பச்சன் 350 கோடி ரூபாய் வருமானம் பெற்றுள்ளார். Kaun Banega Crorepati நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றுவதற்காக மட்டும் அவருக்கு 92 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், "கல்கி" திரைப்படத்தில் நடித்ததற்காக பெற்ற சம்பளம், பிற திரைப்படங்கள், விளம்பரங்களில் நடித்ததற்கான சம்பளம் ஆகியவற்றை சேர்த்து மொத்தம் 350 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
இந்த வருமானத்தில் இருந்து, அவர் 120 கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக ஷாருக்கான் அதிக வரி செலுத்தி முதலிடத்தில் இருந்த நிலையில் இந்த முறை அமிதாப் பச்சன் முதலிடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.