Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திடீரென 500 ரூபாய் கட்டணத்தை உயர்த்திய அமேசான் ப்ரைம்: ஓடிடி ரசிகர்கள் அதிர்ச்சி!

திடீரென 500 ரூபாய் கட்டணத்தை உயர்த்திய அமேசான் ப்ரைம்: ஓடிடி ரசிகர்கள் அதிர்ச்சி!
, வியாழன், 21 அக்டோபர் 2021 (09:28 IST)
அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் திடீரென 500 ரூபாய் கட்டணத்தை உயர்த்தி உள்ளதை அடுத்து ஓடிடி ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
தமிழ் திரைப்படங்கள் மற்றும் ஹாலிவுட் படங்கள் என ஏராளமான திரைப்படங்கள் அமேசான் ஓடிடியில் உள்ளன என்பதும் இதனால் அமேசான் ஓடிடிக்கு வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவில் அமேசான் ப்ரைம் தொடங்கப்பட்டபோது 499 ரூபாய் மட்டுமே கட்டணம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் 999 என உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது மேலும் ரூபாய் 500 அதிகரித்து 1499 என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாகவும் இந்த புதிய கட்டணம் விரைவில் அமலுக்கு வரும் என்றும் அமேசான் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் ஓடிடி ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திடீரென 50 சதவீத கட்டணத்தை உயர்த்திய அமேசான் மீது பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேங்காய் சீனிவாசன்