Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’அமரன்’ படத்தை புறக்கணிக்க வேண்டும்: சமூக வலைத்தளங்களில் திடீர் எதிர்ப்பு..!

Advertiesment
’அமரன்’ படத்தை புறக்கணிக்க வேண்டும்: சமூக வலைத்தளங்களில் திடீர் எதிர்ப்பு..!

Siva

, திங்கள், 28 அக்டோபர் 2024 (13:16 IST)
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் வரும் தீபாவளி நாளில் வெளியாக இருக்கின்ற நிலையில், சமூக வலைதளங்களில் இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என திடீரென பதிவுகள் வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமரன் படத்தில் நடிக்கும் சாய் பல்லவி கடந்த 2022 ஆம் ஆண்டு அளித்த பேட்டியில், "வன்முறைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. காஷ்மீர் பைல்ஸ் படத்தில் தீவிரவாதிகளால் இந்துக்கள் கொல்லப்பட்டதை காட்டியுள்ளனர். அது பயங்கரவாதம் என்றால், பசுவை அழைத்துச் சென்ற இஸ்லாமியர் மீது தாக்குதல் நடத்திவிட்டு 'ஜெய் ஸ்ரீ ராம்' கோசம் எழுப்பியதும் பயங்கரவாதம் தான். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?" என்று கருத்து தெரிவித்தார்.

அவரின் இந்த பேட்டியின் வீடியோ இணையத்தில் வெளியாகிய பின்னர் கடும் எதிர்ப்பு கிளம்பியது, மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதற்கு பதிலளித்த சாய் பல்லவி, "எல்லா மனிதர்களும் ஒன்றே; அவர்களை ஜாதி, மதம், இனத்தால் பிரிப்பது சரியானது அல்ல," என தான் கூறியிருந்ததாக விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், அந்த வீடியோ மீண்டும் பரவி, சிலர் அவர் நடித்த அமரன் திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும், "ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல மறுக்கும் நீங்கள் எதற்காக ராமாயணம் திரைப்படத்தில் சீதா தேவியாக நடிக்க வேண்டும்?" எனும் கேள்வியும் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக வெற்றிக் கழகத்தின் சித்தாந்த பாடலை உருவாக்கிய தெருக்குரல் அறிவு… நெகிழ்ச்சிப் பதிவு!