Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக வெற்றிக் கழகத்தின் சித்தாந்த பாடலை உருவாக்கிய தெருக்குரல் அறிவு… நெகிழ்ச்சிப் பதிவு!

Advertiesment
தமிழக வெற்றிக் கழகத்தின் சித்தாந்த பாடலை உருவாக்கிய தெருக்குரல் அறிவு… நெகிழ்ச்சிப் பதிவு!

vinoth

, திங்கள், 28 அக்டோபர் 2024 (11:51 IST)
விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு விக்கிரவாண்டி வி சாலையில் நேற்று மாலை நடந்து முடிந்தது. இந்த மாநாடு பல குளறுபடிகள் நடந்தாலும் விஜய்யின் 50 நிமிடப் பேச்சு அரசியல் உலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  வழக்கமாக தன்னுடைய மேடைப் பேச்சுகளில் மிகவும் தன்மையாக பேசும் விஜய், நேற்று அரசியல் மேடையில் ஆவேசமாக ஆர்ப்பரித்தார்.

தனது பேச்சில் பல அரசியல் கட்சிகளையும் தலைவர்களையும் போற்றியும் விமர்சித்தும் பேசினார். அவரின் பேச்சு தமிழக அரசியல் சூழலில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  விஜய் தன்னுடைய பேச்சின் நடுவே பெயர் குறிப்பிடாமல் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளையும் தாக்கிப் பேசினார்.

விஜய் பேசுவதற்கு முன்பாக மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது த வெ க-வின் சித்தாந்த பாடல் விஜய் குரலில் ஒலிபரப்பானது. அந்த பாடலை உருவாக்கியது குறித்து பாடகர் தெருக்குரல் அறிவு தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “இந்த பாடலை உருவாக்க என்னை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்று விஜய் அண்ணனிடம் கேட்டேன். அவர் “உன்னைத் தவிர வேறு யாராலும் இதை செய்ய முடியாது” என்றார்” என விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யப்பா… உன் கூடவுமா அரசியல் பண்ணனும்?... விஜய்யை சீண்டிய போஸ் வெங்கட்!