Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமண வீடியோவைப் பகிர்ந்த அமலா பால்!

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (17:39 IST)
நடிகை அமலா பால் தன்னுடைய தம்பியின் திருமண வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் மைனா படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

இதையடுத்து இப்போது தொடர்ச்சியாக துணிச்சலான மற்றும் சர்ச்சையானக் கதாபாத்திரங்களாகவே தேர்வு செய்து நடித்து வந்தாலும் பெரிய அளவுக்கு வாய்ப்புகள் இல்லை. இதையடுத்து இப்போது அவர் வெப் தொடர்களில் அதிக அளவில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் மும்பையில் ஒருவரை காதலித்து வருவதாகவும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அதை அவர் மறுத்தார்.

இந்நிலையில் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் தனது தம்பியின் திருமண வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் முகேஷ் மீது பாலியல் புகார் அளித்த நடிகை.. திடீரென வாபஸ் பெற்றதால் பரபரப்பு..!

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட ஆர்ஜே பாலாஜி.. என்ன காரணம்?

என் தந்தை ஒரு லெஜெண்ட்; பொய்யான தகவல்களை பகிர்வதை தவிர்க்கவும்.. ஏஆர்.ரஹ்மான் மகன்

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

மாடர்ன் உடையில் மிரட்டும் போஸ்களில் ரைஸா வில்சன்!

அடுத்த கட்டுரையில்