தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துள்ளது.
அமலா பாலும் தொடர்ந்து காதல் , கல்யாணம் என கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். ஆனால், அது நிஜத்தில் நடந்தேறவில்லை. அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கேரியரில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது தனது நண்பரின் திருமணத்திற்கு அழகிய கருப்பு நிற ட்ரான்ஸ்பிரன்ட் சேலை உடுத்திக்கொண்டு கிளாமராக கவர்ந்திழுத்துள்ளார். இந்த வீடியோவில் அமலா பால் எல்லோரையும் தன் கார்ஜியஸ் அழகில் மயக்கிவிட்டார்.