Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் இளையராஜா இசையமைக்கும் புதிய படம்… டைட்டில் அறிவிப்பு!

அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் இளையராஜா இசையமைக்கும் புதிய படம்… டைட்டில் அறிவிப்பு!
, புதன், 5 ஜூலை 2023 (07:22 IST)
நேரம் மற்றும் பிரேமம் ஆகிய படங்களுக்குப் பிறகு 7 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய  கோல்டு திரைப்படம் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது.

இதையடுத்து அல்போன்ஸ் புத்ரன் நடன இயக்குனர் சாண்டியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.  இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களாக தொடங்கி நடந்து வரும் நிலையில் இப்போது படத்தின் தலைப்பு அறிவிக்கப்ப்ட்டுள்ளது. படத்துக்கு கிஃப்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் இளையராஜா இசையில் 7 பாடல்கள் இடம்பெறும் என போஸ்டரிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு மீண்டும் போகும் உதயநிதியின் படம்''- இயக்குனர் தகவல்