Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

#கமல்ஹாசன்233 படத்தின் இயக்குநர் இவர்தான்! ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு

#கமல்ஹாசன்233  படத்தின் இயக்குநர் இவர்தான்!  ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு
, செவ்வாய், 4 ஜூலை 2023 (18:10 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவர்  நடிப்பில், லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில்  வெளியான படம் விக்ரம. இப்படம்  மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூல் குவித்து, கமலின் சினிமா கேரியலில் முக்கியபடமாக அமைந்தது.

தற்போது, ஷங்கர் இயக்கத்தில்,   இந்தியன் 2 ல் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து, அமிதாப், பிரபாஸ், தீபிகா படுகோன்  நடிப்பில்பிராஜக்ட் கே படத்தில் கமல்ஹாசன்   நடிக்க உள்ளார்.

இந்தப்  படத்திற்குப் பின், கமல்ஹாசன் அடுத்து வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தை அவரின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

ஏற்கனவே  வினோத் இயக்கிய சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம்,   நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்கள்   நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்  இவர் கமலை வைத்து இயக்கவுள்ள அடுத்த படத்திற்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் , ராஜ்கமல் இண்டர்நேசனல் பிலிம்ஸ்  இன்று மாலை 9 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், HE KNOWS THE WAY, HE  SHOWS THE WAY  என்று குறிப்பிட்டிருந்தது.

அதன்படி தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ்  நிறுவனம் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், ‘’கமல்ஹாசன் மற்றும்  ஆர். மகேந்திரன் தயாரிப்பில், , இயக்குனர் ஹெச்.வினோத்  எழுதி, இயக்கவுள்ள  ‘’கமல்233’’ படத்தில்  கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் 152 வது படமாகும்.  இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் ரெடி பாடலுக்கு செம ஆட்டம் போட்ட அர்ச்சனா மகள் சாரா- வீடியோ!