Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 3 April 2025
webdunia

செண்ட்ராயனின் முட்டாள்தனத்தால் தப்பித்துவிடுவாரா ஐஸ்வர்யா?

Advertiesment
sendrayan
, செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (22:46 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஐஸ்வர்யா, மும்தாஜ், ஜனனி, செண்ட்ராயன் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் இருக்கும் நிலையில் இன்று ஒரு வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

இந்த டாஸ்க்கின்படி போனில் போட்டியாளரிடம் சொல்லப்படும் விஷயத்தை இன்னொருவரிடம் கூறி அவரை சம்மதிக்க வைக்க வேண்டும். அவ்வாறு சம்மதிக்க வைத்துவிட்டால் போன் பேசியவர் நாமினேஷனில் இருந்து அடுத்த வாரம் காப்பாற்றப்படுவார்.

இதன்படி முதல் போன் ஐஸ்வர்யாவுக்கு வந்தது. அதன்படி செண்ட்ராயனின் முடியை சிகப்பு கலராக்க வேண்டும் என்பது டாஸ்க். இதனை ஐஸ்வர்யா, நீங்கள் தலைமுடியை கலராக்கினால் நான் காப்பாற்றபடுவேன் என்று கூறாமல் செண்ட்ராயன் காப்பாற்றப்படுவதாக பொய் கூறி கலரடிக்க சம்மதிக்க வைக்கின்றார்.

webdunia
உலகிலேயே வடிகட்டிய முட்டாளான செண்ட்ராயன் அதை உண்மை என நம்பி கலராக்க சம்மதிக்கின்றார். சக போட்டியாளர்கள் செண்ட்ராயனுக்கு அறிவுரை கூறியும் அவர் அதை காதில் வாங்கவில்லை. எனவே செண்ட்ராயனின் முட்டாள்தனத்தால் இந்த ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டுவிடுவார் போல் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஷால் நினைத்திருந்தால் என் மகனை காப்பாற்றி இருக்கலாம்: டிரைவரின் தந்தை கதறல்