Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உறுதி செய்யப்பட்ட ‘அஜித் 61’ படத் தலைப்பு… குஷியான ரசிகர்கள்!

உறுதி செய்யப்பட்ட ‘அஜித் 61’ படத் தலைப்பு… குஷியான ரசிகர்கள்!
, வியாழன், 16 ஜூன் 2022 (14:59 IST)
அஜித் நடிப்பில் H வினோத் இயக்கும் AK 61 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ்  பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

மேலும் ஜான் கொக்கன், ராஜதந்திரம் வீரா, நடிகை நாயனா சாய் ஆகியோரும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் இதுவரை நடந்த 50 நாட்களுக்கும் மேலான படப்பிடிப்பில்  H வினோத் 75 சதவீதத்துக்கும் மேலான படப்பிடிப்பை முடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இன்னும் படத்துக்கு தலைப்பு வைக்காத நிலையில் முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான IVY புரடொக்‌ஷன்ஸ் தங்களுடைய டிவிட்டர் பக்கத்துல் “AK 61 Title locked” என அறிவித்துள்ளது. இந்த நிறுவனம்தான் தெலுங்கில் வலிமை படத்தை ரிலீஸ் செய்தது. அஜித் 61 படத்தையும் விநியோகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர்களின் இந்த டிவீட் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளியானது வீட்ல விசேஷம் படத்தின் அட்டகாசமான Sneak peek காட்சி!