Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐதராபாத் ஷூட்டிங்கை முடித்த அஜித்?... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

ஐதராபாத் ஷூட்டிங்கை முடித்த அஜித்?... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
, புதன், 8 ஜூன் 2022 (09:45 IST)
அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ்  பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் தீபாவளிக்கு படம் ரிலீஸாகலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இரண்டு கட்டங்களாக ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட அஜித் தற்போது தனது காட்சிகளை அங்கு நடித்து முடித்து சென்னை திரும்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக அஜித் விமானத்தில் செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குனருக்கு விலையுயர்ந்த கார்... இவர்களுக்கு 13 பைக்குகள்… கமல் கொடுத்த அடுத்த சர்ப்ரைஸ்!