அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான குட் பேட் அக்லி படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
அஜித் ஜோடியாக திரிஷா நடித்து குட் பேட் அக்லி படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று இரவு 7.03 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சற்றுமுன் இந்த டீசர் வீடியோ வெளியானது.
அஜித் மூன்று விதமான கெட்டப்புகளில் அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் உள்ள இந்த டீசர் வீடியோ தற்போது இணையத்தில் நேரலை வருகிறது. விடாமுயற்சி திரைப்படம் அஜித் ரசிகர்கள் உட்பட அனைவரையும் திருப்தி செய்யாத நிலையில் இந்த படம் இரு மடங்கு திருப்தி செய்யும் என்று இந்த டீசரிலிருந்து தெரிய வருகிறது
அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், ராகுல் தேவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படம் ஏப்ரல் 10ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளியாகவுள்ளது.