மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மார்ச் 18ஆம் தேதி மூடப்படும் என்றும், அன்றைய தினம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி கிடையாது என்றும் மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ஆடி வீதிகள் மற்றும் ஆயிரம் கால் மண்டபத்தில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வழக்கம் போல் அனுமதிக்கப்படுவார்கள்.
மார்ச் 18ஆம் தேதி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சுவாமியுடன் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு செல்கிறார்கள். அங்கு திருக்கல்யாணம் முடிந்த பிறகு, இரவில் மீண்டும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு திரும்புவர்.
எனவே, அன்றைய தினம் காலை 4 மணி முதல் இரவு வரை கோவில் நடை சாத்தப்பட்டு இருக்கும் என்றும் கோவில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.