அஜித் இப்போது தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் நடந்து வருகிறது. இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் ஷூட்டிங் இப்போதுதான் தொடங்கியுள்ளது.
இதையடுத்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தை இளம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் அவர் இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் வெற்றிபெற்று 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஜி வி பிரகாஷ் ஒப்பந்தம் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆதிக் ரவிச்சந்திரன் – ஜி வி பிரகாஷ் கூட்டணியில் உருவான மார்க் ஆண்டனி படத்தில் பின்னணி இசை பாராட்டுகளைக் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக அஜித்தின் கிரீடம் படத்துக்கு ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.